சார்ஜா: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 37ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்று (செப். 25) மோதுகிறது.
என்னென்ன மாற்றங்கள்?
இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஃபாபியன் ஆலன், இஷான் போரெல், அடில் ரஷித் ஆகியோர் நீக்கப்ட்டு கிறிஸ் கெய்ல், நாதன் எல்லிஸ், ரவி பீஷ்னோய் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
Team News@SunRisers remain unchanged. @PunjabKingsIPL make 3 changes as Nathan Ellis, Chris Gayle and Ravi Bishnoi named in the team. #VIVOIPL #SRHvPBKS
— IndianPremierLeague (@IPL) September 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Follow the match 👉 https://t.co/B6ITrxUyyF
Here are the Playing XIs 🔽 pic.twitter.com/owAlry0KxI
">Team News@SunRisers remain unchanged. @PunjabKingsIPL make 3 changes as Nathan Ellis, Chris Gayle and Ravi Bishnoi named in the team. #VIVOIPL #SRHvPBKS
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
Follow the match 👉 https://t.co/B6ITrxUyyF
Here are the Playing XIs 🔽 pic.twitter.com/owAlry0KxITeam News@SunRisers remain unchanged. @PunjabKingsIPL make 3 changes as Nathan Ellis, Chris Gayle and Ravi Bishnoi named in the team. #VIVOIPL #SRHvPBKS
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
Follow the match 👉 https://t.co/B6ITrxUyyF
Here are the Playing XIs 🔽 pic.twitter.com/owAlry0KxI
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஜசான் ஹோல்டர், அப்துல் சமத், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது.
பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல் (கேப்டன்), மயாங்க் அகர்வால், கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், தீபக் ஹூடா, நாதன் எல்லீஸ், ஹர்பிரீத் ப்ரர், ரவி பீஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
இதையும் படிங்க: IPL 2021: டெல்லியின் பவர் பேட்டிங்கை கட்டுப்படுத்திய ராஜஸ்தான்