சென்னை: ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதல் பேட்டிங் செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 78, ஏபி டிவில்லியர்ஸ் 76 ரன்களை எடுத்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்க பேட்டர்கள் ராணா, கில் நிதானதமான தொடக்கத்தை அளித்தனர்.
கைல் ஜேமீன்சன் வீசிய இரண்டாவது ஓவரில் கில் 21 (9) ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவருக்கு பின், திரிபாதி 25 (20) ரன்களிலும், ராணா 18 (11) ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 2(5) ரன்களிலும் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
சிறிதுநேரம் தாக்குப்பிடித்த கேப்டன் மோர்கன் ஹர்ஷல் பட்டேலிடம் 29 (23) ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இதன்பின் ரஸ்ஸல் களமிறங்கினார். கடைசி 5 ஓவர்களில் 84 ரன்கள் தேவைப்பட்டது.
-
That's that from Match No.10.@RCBTweets win by 38 runs to register their third win of the season so far. This is the first time in IPL that the #RCB have won their first 3 games.#VIVOIPL pic.twitter.com/Ei90mgn2iD
— IndianPremierLeague (@IPL) April 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">That's that from Match No.10.@RCBTweets win by 38 runs to register their third win of the season so far. This is the first time in IPL that the #RCB have won their first 3 games.#VIVOIPL pic.twitter.com/Ei90mgn2iD
— IndianPremierLeague (@IPL) April 18, 2021That's that from Match No.10.@RCBTweets win by 38 runs to register their third win of the season so far. This is the first time in IPL that the #RCB have won their first 3 games.#VIVOIPL pic.twitter.com/Ei90mgn2iD
— IndianPremierLeague (@IPL) April 18, 2021
சாஹல் வீசிய 17ஆவது ஓவரில் 16 ரன்கள் குவித்த ரஸ்ஸல், தனது அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் ஷகிப் அல் ஹாசன், பாட் கம்மின்ஸ் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை ஜேமீன்சன் வீழ்த்தி ரஸ்ஸலை நிராயுதபாணியாக்கினார்.
ஆட்டத்தை தலைகீழாக மாற்றக்கூடிய 19ஆவது ஓவரை வீச வந்தார் சிராஜ். பேட்டிங் கிரீஸில் ரஸ்ஸல். சிராஜ், ரஸ்ஸலுக்கு எப்படி டெலிவரி அளிக்க போகிறார் என்ற அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். சிராஜ் வீசிய முதல் மூன்று பந்துகளும் அவுட்சைட் ஆஃப் லைனில் வீசினாலும், ஒவ்வொரு பந்தின் லெந்தையும் மாற்றிக் கொண்டே இருந்தார். இந்த மூன்று பந்துகளிலும் ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. நான்காவது பந்தை துல்லியமான யார்க்கர் லெந்தில் வீசி ரஸ்ஸலை வென்றுவிட்டார் சிராஜ். கடைசி பந்தில் தான் ஒரு ஒரு ரன் அடித்தார் ரஸ்ஸல்.
பெரிய இலக்குகளைக் கூட அசலாட்டாக அடிக்கும் ரஸ்ஸல், 19ஆவது ஓவர் முழுவதும் சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்தார் என்று சொன்னால் அதை யாராலும் நம்ப முடியாது.
கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ரஸ்ஸலின் விக்கெட்டை வீழ்த்தி பெங்களூரு அணியின் வெற்றி உறுதி செய்தார் ஹர்ஷல் பட்டேல்.
இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களே எடுத்தது.
இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது. பெங்களூரு தரப்பில் ஜேமீசன் 3 விக்கெட்டுகளையும், சாஹல், ஹர்ஷல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்
மேலும் ஆட்டநாயகன் விருதை ஏபி டிவில்லியர்ஸ் தட்டிச்சென்றார்.
இதையும் படிங்க: மும்பை வெற்றிக்கு வித்திட்ட பாண்ட்யாவின் இரு ரன் அவுட்!