ETV Bharat / sports

IPL 2021 MI vs SRH: வெற்றி கணக்கைத் தொடங்குமா ஹைதராபாத்? - ரோஹித் சர்மா

சென்னை: ஐபிஎல் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், Rohit Sharma , David Warner, Mumbai Indians, SunRisers Hyderabad
IPL 2021 Match Preview: SRH eye stability in batting against MI
author img

By

Published : Apr 17, 2021, 6:53 PM IST

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரின் ஒன்பதாவது லீக் ஆட்டம், சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. முதல் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியைச் சந்தித்த மும்பை அணி, இரண்டாவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.

ஆனால், ஹைதராபாத் அணியோ கொல்கத்தா, பெங்களூரு என இரு அணிகளுடனும் தோல்வியைத் தழுவி, புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருப்பதால், இன்று தனது வெற்றிக் கணக்கை தொடங்க தீவிர முயற்சி செய்யும்.

இவ்விரு அணிகளும் 16 முறை மோதியுள்ளன. அதில், மும்பை இந்தியன்ஸ் 8 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

இதையும் படிங்க: ’வீ மிஸ் யூ’ - மறைந்த நடிகர் விவேக்குக்கு நடராஜன் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.