ETV Bharat / sports

IPL 2021 MI vs KKR: கொல்கத்தா பந்துவீச்சு; திரும்பினார் ரோஹித்

மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

MI vs KKR
MI vs KKR
author img

By

Published : Sep 23, 2021, 7:22 PM IST

அபுதாபி: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.

பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

இதையடுத்து, இரண்டாம் கட்டப்போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 34ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இன்று (செப். 23) மோதுகிறது.

பிளேயிங் XI

இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. முந்தைய போட்டியில், ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்: குவின்டன் டி காக், ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சௌரப் திவாரி, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சஹார், டிரன்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா

இதையும் படிங்க: என்றும் முதலிட மகாராணி மிதாலி ராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.