டெல்லி: ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகின்றது. இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (மே 1) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை அணி பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் என தொடர்ச்சியாக ஐந்து அணிகளை வீழ்த்தி, ஐபிஎல் தொடரில் என்றைக்குமே சோடை போகாத குதிரை என்று சென்னை மீண்டும் நிரூபித்துள்ளது. சென்னை அணியின் பலம் என்றால் தோனி என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட தோனிக்கு பலம் என்னவென்றால் அணியின் கட்டமைப்பில் அவருக்கு இருக்கும் நம்பிக்கைதான்.
-
The marching feet, eyes like steal and the gaze is long 🎶
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) May 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
All set for the game tonight!
Whistle poda ready ah? 🥳#MIvCSK #WhistleFromHome #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/xRCtFCyVhf
">The marching feet, eyes like steal and the gaze is long 🎶
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) May 1, 2021
All set for the game tonight!
Whistle poda ready ah? 🥳#MIvCSK #WhistleFromHome #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/xRCtFCyVhfThe marching feet, eyes like steal and the gaze is long 🎶
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) May 1, 2021
All set for the game tonight!
Whistle poda ready ah? 🥳#MIvCSK #WhistleFromHome #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/xRCtFCyVhf
ருத்துராஜ் ஆரம்பப் போட்டிகளில் சொதப்பினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பளித்தன் மூலம் தனது இயல்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். கடந்த மூன்று போட்டிகளில் சென்னை அணியின் குறைந்தபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்பது 74 ரன்கள் என்றால் அதற்கு காரணம் டூ பிளேசிஸ் ருத்ராஜ் இருவரும்தான். ராயுடு, ரெய்னா, தோனி, சாம் கரன் ஆகியோர் மிடில் ஆர்டரில் மிரட்டும்படி ஆடினால் அது சென்னை அணிக்கு பெரும் வெற்றியை பெற்று தரும்.
பந்துவீச்சில் தீபக் சஹார், இங்கிடி, சர்துல் தாக்கூர், சாம் கரன், மொயின் அலி, ஜடேஜா மும்பை பேட்ஸ்மேன்களை புரட்டி எடுக்க காத்திருக்கின்றனர். தாக்கூர் இத்தொடரில் பெரிதும் சோபிக்கவில்லை என்பதால் இன்று அவர் மேல் கூடுதல் அழுத்தம் இருக்கும்
மும்பை அணி விளையாடிய ஆறு போட்டிகளில் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வியுற்று, கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகளை வென்றுள்ளது. ரோஹித், டி காக் இருவரும் மும்பைக்கு பொறுப்பான தொடக்கத்தை கொடுத்தால் மும்பை அப்போட்டியில் வெற்றி பெறுகிறது. ஆகையால் இன்றும் சென்னையை வீழ்த்த சிறப்பான தொடக்கம் அவசியம்.
மும்பையின் பலம், "கடப்பாறைகள்" என வர்ணிக்கப்படும் அதன் நடுவரிசை பேட்ச்மேன்கள்தான். ஆனால் இந்த தொடரில் அவர்களும் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றனர். கடந்த போட்டியில் இஷான் கிஷன் நீக்கப்பட்டு, குர்னால் பாண்டியா நான்காவது வீரராக களமிறக்கப்ட்டார். இதுபோன்ற சோதனை முயற்சிகள் இன்றும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். கடைசி கட்டத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது, சுழற்பந்தில் சொல்லி அடிப்பது என மும்பை பவுலர்கள் வழக்கம்போல் தங்களது பணியை செவ்வன்ன செய்து வருகின்றனர்.
-
Time for El Clasico of the IPL - #MIvCSK 🔵🟡
— Mumbai Indians (@mipaltan) May 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
तयार का, Paltan? 👊#OneFamily #MumbaiIndians #MI #IPL2021 #KhelTakaTak @MXTakaTak MI TV pic.twitter.com/x2xrRLx71g
">Time for El Clasico of the IPL - #MIvCSK 🔵🟡
— Mumbai Indians (@mipaltan) May 1, 2021
तयार का, Paltan? 👊#OneFamily #MumbaiIndians #MI #IPL2021 #KhelTakaTak @MXTakaTak MI TV pic.twitter.com/x2xrRLx71gTime for El Clasico of the IPL - #MIvCSK 🔵🟡
— Mumbai Indians (@mipaltan) May 1, 2021
तयार का, Paltan? 👊#OneFamily #MumbaiIndians #MI #IPL2021 #KhelTakaTak @MXTakaTak MI TV pic.twitter.com/x2xrRLx71g
சென்னை - மும்பை அணிகளை இந்தியா - பாகிஸ்தான் அணிகளுடன் ஓப்பீடு செய்து, இவர்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு இரு அணிகள் பரமவைரிகள் என்று ரசிகர்கள் பொதுப்படையாக கூறினாலும், டி20 கிரிக்கெட் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தவிர்க்க முடியாத டி20 அணிகள் என்பதால் இந்த ஆரவாரம் நீடித்து வருகிறது. இரு அணிகளும் மற்ற அணிகளுடன் விளையாடும்போது ஒரு விதமாகவும் தங்களுக்குள் விளையாடும்போது வேறு வகையில் அணுகி வருவதும் இதனால் தான்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணிகளும் மற்ற அணியுடன், நேருக்கு நேர் 32 போட்டிகளை விளையாடியிருக்கவில்லை.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 32 போட்டிகளில் மோதி 19 போட்டிகளில் மும்பை பாட்ஷாவும், 13 போட்டிகளில் சென்னை மாணிக்கமும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
நாளை (மே 2) தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், நாளை காலை வரை அசைப்போடுவதற்கு ஏதுவாக இன்றைய போட்டி அமைந்திருப்பதால், ரசிகர்கள் இன்று பெரும் ஆர்வத்தில் திளைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ரசிகர்களின் அன்பை நாட்டு மக்களுக்கு கொடுக்கிறேன்'