ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஓரளவுக்குத் தாக்குபிடித்தனர். ஆவேஷ் கான் பந்துவீச்சில் விராட் கோலி 12(11) ரன்களிலும், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் தேவ்தத் படிக்கல் 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, ராஜத் பட்டீதர் நிதானமாக ஆட, மேக்ஸ்வெல் சற்று அதிரடி காட்டினார். 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 20 பந்துகளில் 25 ரன்களில் அமித் மிஸ்ராவிடம் வீழ்ந்தார்.
அதன்பின்னர் களம்கண்ட டிவில்லியர்ஸ் ராஜத் பட்டிதர் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 54 ரன்களை எடுத்து ஆறுதளித்தது. அக்சர் பட்டேல் வீசிய 15ஆவது ஓவரில் ராஜத் பட்டீதர் 31(22) ரன்களில் அவுட்டானார்.
அடுத்துவந்த வாஷிங்டன் சுந்தர் 6(9) ரன்களில் வெளியேறினார். டிவில்லியர்ஸ், தான் சந்தித்த 35 பந்துகளில் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். ஸ்டாய்னிஸ் 20ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் உள்பட 22 ரன்களை குவித்து டிவில்லியர்ஸ் அசத்தினார்.
இதன்மூலம் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. டிவில்லியர்ஸ் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்கமால் இருந்தார்.
டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா, ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
-
He is the Purple Cap holder and @HarshalPatel23 has another one in his kitty. Prithvi edges one to ABD and walks back for 21 (18). https://t.co/NQ9SSSBbVT #DCvRCB #VIVOIPL pic.twitter.com/sX6J2SGddO
— IndianPremierLeague (@IPL) April 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">He is the Purple Cap holder and @HarshalPatel23 has another one in his kitty. Prithvi edges one to ABD and walks back for 21 (18). https://t.co/NQ9SSSBbVT #DCvRCB #VIVOIPL pic.twitter.com/sX6J2SGddO
— IndianPremierLeague (@IPL) April 27, 2021He is the Purple Cap holder and @HarshalPatel23 has another one in his kitty. Prithvi edges one to ABD and walks back for 21 (18). https://t.co/NQ9SSSBbVT #DCvRCB #VIVOIPL pic.twitter.com/sX6J2SGddO
— IndianPremierLeague (@IPL) April 27, 2021
அகமதாபாத் மைதானத்தில் காற்று மிகவேகமாக வீசியதால், மைதானம் புழுதிமயம் ஆனது. ஆதலால் இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு சற்று தாமதமானது.
தற்போது 172 என்ற இமாலய இலக்கை துரத்திவரும் டெல்லி அணி, 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
-
Some tight overs bowled and the RRR is now 1️⃣1️⃣. 📈#PlayBold #WeAreChallengers #IPL2021 #DCvRCB #DareToDream pic.twitter.com/KROvWaelNK
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Some tight overs bowled and the RRR is now 1️⃣1️⃣. 📈#PlayBold #WeAreChallengers #IPL2021 #DCvRCB #DareToDream pic.twitter.com/KROvWaelNK
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 27, 2021Some tight overs bowled and the RRR is now 1️⃣1️⃣. 📈#PlayBold #WeAreChallengers #IPL2021 #DCvRCB #DareToDream pic.twitter.com/KROvWaelNK
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 27, 2021