சென்னை: ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக விளையாடிதால், பஞ்சாப் அணி 120 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தமிழ்நாட்டு வீரர் ஷாருக் கான் 22(17) ரன்களும், மயாங்க் அகர்வால் 22(25) ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
120 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய ஹைதாராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் வார்னர் இணை முதலில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் ஹைதராபாத் அணி 6 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது.
நிதானமாக ஆடி வந்த வார்னர் ஃபேபியன் ஆலன் பந்துவீச்சில் மயாங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். வார்னர் 37 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் என 37 ரன்களை எடுத்திருந்தார்.
-
The comeback is always greater than the setback 🧡#OrangeOrNothing #OrangeArmy #IPL2021 #PBKSvSRH pic.twitter.com/7aZZCFGhkX
— SunRisers Hyderabad (@SunRisers) April 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The comeback is always greater than the setback 🧡#OrangeOrNothing #OrangeArmy #IPL2021 #PBKSvSRH pic.twitter.com/7aZZCFGhkX
— SunRisers Hyderabad (@SunRisers) April 21, 2021The comeback is always greater than the setback 🧡#OrangeOrNothing #OrangeArmy #IPL2021 #PBKSvSRH pic.twitter.com/7aZZCFGhkX
— SunRisers Hyderabad (@SunRisers) April 21, 2021
அதன்பின் களமிறங்கிய வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். பேர்ஸ்டோவ் 48 பந்துகளின் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
இருவரின் நிதான ஆட்டத்தால், ஹைதராபாத் அணி 18.4 ஓவரிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 121 ரன்களை எடுத்து, தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
கேன் வில்லியம்சன் 16(19) ரன்களிலும், பேர்ஸ்டோவ் 63(56) ரன்களிலும் ஆட்டமிழக்கமால் இருந்தனர்.
அரைசதம் அடித்த ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: IPL 2021 KKR vs CSK: டாஸ் வென்ற கொல்கத்தா; சிஎஸ்கே பேட்டிங்