சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 14ஆவது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இதன்படி ராகுலும், மயாங்க் அகர்வாலும் முதலில் களமிறங்கனார்கள். புவனேஷ்வர் குமார் வீசிய மூன்றாம் ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் ராகுல் 4(6) ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுமையாக ஆடி வந்த மயாங்க் அகர்வால் 22(25) ரன்களில் கலீல் அகமது பந்துவீச்சில் ரஷிதிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதனையடுத்து களமிறங்கிய பூரன் ஒரு பந்துகளைக் கூட சந்திக்காத நிலையில், டேவிட் வார்னரால் ரன் அவுட்டாக்கப்பட்டார். இந்த போட்டியிலும் பூரன் ரன் ஏதும் எடுக்கவில்லை. இத்தொடரின் நான்கு போட்டியிலும் பூரன் முறையே 0, 0, 9, 0 ரன்களையே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Job well done in the first innings 🙌
— SunRisers Hyderabad (@SunRisers) April 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Over to our batsmen now!#PBKSvSRH #OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/3py7n4cWNS
">Job well done in the first innings 🙌
— SunRisers Hyderabad (@SunRisers) April 21, 2021
Over to our batsmen now!#PBKSvSRH #OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/3py7n4cWNSJob well done in the first innings 🙌
— SunRisers Hyderabad (@SunRisers) April 21, 2021
Over to our batsmen now!#PBKSvSRH #OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/3py7n4cWNS
அதன்பிறகு களமிறங்கிய ஹூடா 13(11) ரன்களிலும், ஹென்ரிக்ஸ் 14(17) ரன்களிலும், ஃபேபியன் ஆலன் 6 (11) ரன்களிலும் நடையை கட்டினர்.
-
We have defended a low total against #SRH before, time to do it again! 🤞#SaddaPunjab #IPL2021 #PunjabKings #PBKSvSRH pic.twitter.com/LjvVk3AqJI
— Punjab Kings (@PunjabKingsIPL) April 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We have defended a low total against #SRH before, time to do it again! 🤞#SaddaPunjab #IPL2021 #PunjabKings #PBKSvSRH pic.twitter.com/LjvVk3AqJI
— Punjab Kings (@PunjabKingsIPL) April 21, 2021We have defended a low total against #SRH before, time to do it again! 🤞#SaddaPunjab #IPL2021 #PunjabKings #PBKSvSRH pic.twitter.com/LjvVk3AqJI
— Punjab Kings (@PunjabKingsIPL) April 21, 2021
சற்றுநேரம் தாக்குபிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக் கான் 22(17) ரன்களில் கலீல் அகமதிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதி வரிசை வீரர்களும் அடுத்தடுத்து ஹைதராபாத்தின் பந்துவீச்சில் வீழ்ந்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும், சித்தார்த் கவுல், ரஷித் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க: KKR vs CSK: முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் சிஎஸ்கே; முட்டுக்கட்டை போடுமா கேகேஆர்