ETV Bharat / sports

IPL 2021 DC vs MI: டாஸ் வென்ற ரோஹித்; மும்பை பேட்டிங்!

டெல்லி - மும்பை அணிகளுக்கு இடையேயான 13ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

IPL 2021 DC vs MI: டாஸ் வென்ற ரோஹித்; மும்பை முதல் பேட்டிங்

author img

By

Published : Apr 20, 2021, 7:19 PM IST

சென்னை: 14ஆவது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.

இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

டெல்லி அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், லுக்மேன் மெரிவாலா ஆகியோர் நீக்கப்பட்டு ஹெட்மையர், அமித் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மும்பை அணியில் ஆடம் மில்னேக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், பிருத்வி ஷா, சிம்ரோன் ஹெட்மையர், ஸ்டாய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித், லலித் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா,

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, கைரன் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், ராகுல் சாஹர், ஜெயந்த யாதவ்

ஐபிஎல்லில் மும்பை அணியும், டெல்லி அணியும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி, 16 போட்டிகளில் மும்பையும், 12 போட்டிகளில் டெல்லி அணியும் வென்றுள்ளன.

இதையும் படிங்க: முழு உடற்தகுதிக்கு நான் கேரண்டி - தோனி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.