வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவிருக்கும் 14ஆவது ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி நேற்று (ஏப்.04) உறுதிப்படுத்தினார்.
இது குறித்து "அனைத்து போட்டிகளும் திட்டமிட்ட அட்டவணையின்படி நடைபெறும்" என்று கங்குலி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், மகாராஷ்டிரா அரசு வார இறுதி நாள்களில் ஊரடங்கை அறிவித்த நிலையில், அரசு அறிவித்த சில மணி நேரங்களிலேயே கங்குலி இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
முதற்கட்டமாக, மும்பை, வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை மொத்தம் பத்து போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அங்கு முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்குகிறது.
பிசிசிஐ துணைத் தலைவர் ராஜூவ் சுக்லா இதுகுறித்து கூறுகையில், "வீர்ரகளை கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரே வழி, வீரர்களுக்கு தடுப்பூசி செல்லுத்துவதுதான். இதுகுறித்து விரைவில் சுகாதார அமைசகத்திடம் கலந்துபேசி பிசிசிஐ முடிவெடுக்கும்" என்றார்.
இதையும் படிங்க: 3டி ப்ரொஜெக்ஷனில் புதிய சீருடையை அறிமுகப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!