இந்தூர் : இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்குத் தயாராகிவிட்டார் அதிரடி ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர்.
இவர் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். தொடர்ந்து ஈடிவி பாரத்தின் சித்தார்த் மச்சிவால் (Sidharth Machiwal) கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
வெங்கடேஷ் பேட்டி
கேள்வி : கிரிக்கெட்டில் நிறைய ஏற்ற தாழ்வுகளை பார்த்திருப்பீர்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : போராட்டம் என்பது முடிவடையாது, எனது தொழில் முடியும் வரை எனது கடின உழைப்பும் முடிவடையாது. ஆம், நான் இந்திய அணிக்காக விளையாடப் போவதை பெருமையாக உணர்கிறேன்.
கேள்வி : உங்களின் அன்றாட பயிற்சி செயற்முறைகள் என்னென்ன? எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
பதில் : ஒவ்வொரு உள்நாட்டு வீரரும் செய்வது ஒன்றுதான். காலையிலும் மாலையிலும் பேட்டிங் செய்வதற்கும் பந்து வீசுவதற்கும் கிளப்பிற்குச் செல்வது, பீல்டிங்கில் பயிற்சிகள் மேற்கொள்வது. அதிலும் குறிப்பாக உடலைக் கட்டுக்கோப்பாக கவனித்துக்கொள்வது. கிரிக்கெட்டில் உடற்பயிற்சி மிக முக்கியம். நானும் அதையே செய்துள்ளேன், என் உடலை மிகவும் கவனித்து வருகிறேன், எதிர்காலத்திலும் இதைத் தொடர்ந்து செய்வேன் என்று நம்புகிறேன்.
கேள்வி : இப்போது உங்கள் கவனம் என்ன?
பதில் : எனக்கு அப்படி எந்தத் திட்டமிடலும் இல்லை, ஆனால் எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும், அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, என்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன். நான் எனது நாட்டிற்காக போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்பேன், ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடுவது மிக உயர்ந்த கவுரவம்.
கேள்வி : தற்போது எதில் கவனம் செலுத்துகிறீர்கள்?
பதில் : முன்னேற்றம் நிலையானது மற்றும் அது எல்லா நேரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. விளையாட்டை பொறுத்தவரை நாம் முழுமையாகச் செய்துவிட்டோம் என ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது. நான் அதிக கேம்களை விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன், எனக்கு கிடைக்கும் அனுபவத்துடன், எனது ஆட்டத்தை மேம்படுத்துவேன் என்று நம்புகிறேன்.
கேள்வி : உங்கள் படிப்பு மற்றும் திட்டங்கள் என்ன?
பதில் : நான் பட்டயக் கணக்காளர் (CA) படித்திருக்கிறேன். நான் முதன் முதலில் ரஞ்சி டிராபியில் அறிமுகமானேன். என்னால் கிரிக்கெட்டில் அந்நேரம் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. தொடர்ந்து எம்பிஏ படித்தேன். நான் தென்னிந்திய குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகையால் விளையாட்டோடு, படிப்பிலும் சரிசமமாக கவனம் செலுத்தினேன். படிப்பு இரண்டாம்பட்சம் என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. விளையாட்டிலும் படிப்பிலும் சமமான கவனம் இருந்தது.
இதையும் படிங்க : INDIA'S TEST SQUAD நியூசி., டெஸ்ட் தொடர்: கேப்டனாகும் ரஹானே; விராட்டுக்கு ஓய்வு!