டெல்லி: 2022 ஐபிஎல் போட்டியில் லீக் சுற்றின் முடிவில் பஞ்சாப் அணி 6ஆவது இடத்தைப்பிடித்தது. கடந்த நான்கு ஆண்டுகளிலும் பஞ்சாப் அணி 6ஆவது இடத்தையே பிடித்தது. இதுவரை இரு முறை மட்டுமே பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணியில் இருந்த மயங்க் அகர்வால், கடந்த சீசனில் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், 2023 ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளார். அவர் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக விளையாடிய நிலையில், இந்த சீசனில் கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த மெகா ஐபிஎல் ஏலத்தில், பஞ்சாப் அணி 8.25 கோடி ரூபாய்க்கு ஷிகர் தவானை தேர்வு செய்தது. தவான் 14 ஆட்டங்களில் 460 ரன்களை எடுத்தார். ஐபிஎல் போட்டிகளில் 11 ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்ட தவான், அதில் 4 முறை கோப்பையை வென்றுள்ளார். 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தவான், சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்துள்ளார்.
இதையும் படிங்க:டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்துள்ள கோலி..