ETV Bharat / sports

CSK vs DC: பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே - வெற்றியைத் தொடருமா டெல்லி?! - சென்னை vs டெல்லி அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றை நெருங்கும். அதேநேரம் தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ள டெல்லி அணி, வெற்றியைத் தொடர்ந்தால் சிஎஸ்கேவிற்கு சிக்கல் உருவாக வாய்ப்புண்டு.

Chennai VS Delhi
சென்னை VS டெல்லி
author img

By

Published : May 10, 2023, 2:53 PM IST

சென்னை: ஐபிஎல் தொடரின் 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இன்று (மே 10) எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 13 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அணியில் டெவோன் கான்வே (458 ரன்கள்), ருத்துராஜ் கெய்க்வாட் (384), ஷிவம் துபே (290), ரஹானே (245) ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். கடைசி கட்டத்தில் களம் இறங்கும் கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்துகிறார்.

பிளே ஆஃப் உறுதி?: பந்துவீச்சிலும் சென்னை அணி முன்னேற்றம் கண்டு வருகிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தீபக் சாஹர், தேஷ் பாண்டே, பதிரானா சிறப்பாக பந்து வீசினர். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீக்சனாவை நம்பலாம். மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆடும் லெவனில் அவர் இடம்பெறுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

13 புள்ளிகளைப் பெற்றுள்ள சென்னை அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி விடும். சேப்பாக்கம் மைதானம் சென்னை அணியின் கோட்டையாக கருதப்படுவதால், மஞ்சள் படைக்கு ரசிகர்களின் ஆதரவு கரைபுரளும் என்பதை மறுக்க முடியாது.

Chennai VS Delhi
சென்னை VS டெல்லி

வெற்றியைத் தொடருமா டெல்லி?: டெல்லி அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்தாலும், அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. தொடரின் முதல் 5 ஆட்டங்களில் தோல்வியடைந்த டெல்லி அணி, கடைசி 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று எழுச்சி பெற்றுள்ளது. கடைசியாக பெங்களூருவை எதிர்கொண்ட அந்த அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் கேப்டன் வார்னர், பிலிப் சால்ட், மார்ஷ், ரோசோவ் நம்பிக்கை அளிக்கின்றனர்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மணீஷ் பாண்டே, அமன் ஹகீம் கான் நிலைத்து நின்று விளையாடத் தவறுகின்றனர். பந்துவீச்சில் அனுபவ வீரர் இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ் வலுசேர்க்கின்றனர். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே சொந்தக் காரணங்களுக்காக தாய் நாட்டுக்குச் சென்றுள்ளதால், அவர் இன்றைய ஆட்டத்தில் இடம்பெற வாய்ப்பில்லை.

டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால், 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நடுவரிசைக்கு சென்றுவிடும். ஏற்கனவே ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் 10 புள்ளிகளுடன் முறையே 5-8 இடங்களில் உள்ளன. டெல்லி அணி அடுத்தகட்டத்துக்குச் செல்ல இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால், வெற்றிக்காகப் போராடும்.

ஆட்டம் எங்கே?: சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் லீக் ஆட்டம், சென்னை - சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

சென்னை உத்தேச அணி: கான்வே, கெய்க்வாட், ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், தீக்சனா, பதிரானா, துஷார் தேஷ்பாண்டே.

டெல்லி உத்தேச அணி: பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ரோசோவ், அமன் ஹகீம் கான், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், ரிபல் படேல்/சர்ஃப்ராஸ் கான், கலீல் அகமது/லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.