ETV Bharat / sports

MI vs GT: வரிந்து கட்டும் மும்பை - பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையுமா குஜராத்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஆனால் அதேநேரம், தொடர் வெற்றிகளை குவித்து வரும் மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் குஜராத் அணி வீழ்த்துமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Today ipl match
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : May 12, 2023, 2:10 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று (மே 12) நடக்கும் 57வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 3 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள அந்த அணி, 16 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மிரட்டும் பேட்டிங்: குஜராத் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, எதிரணிகளை மிரட்டும் வகையில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா, சுப்மன் கில் வலுசேர்க்கின்றனர். லக்னோ அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை சேர்த்தது. மிடில் ஆர்டரில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா நம்பிக்கை அளிக்கின்றனர்.

பந்துவீச்சை பொறுத்தவரை முகமது ஷமி, ரஷீத் கான் ஃபார்மில் உள்ளனர். இருவரும் தலா 19 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். அல்சாரி ஜோசப், நூர் அகமது, மொகீத் சர்மா ஆகியோரும் எதிர்பார்த்த பங்களிப்பை அளிக்கின்றனர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் குஜராத் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், வெற்றிக்காக போராடும்.

Mumbai vs Gujrat
மும்பை vs குஜராத்

மீண்டு வருவாரா ரோஹித்?: இந்நிலையில் தொடக்கத்தில் தடுமாறிய மும்பை அணி, மீண்டு வந்துள்ளது. 11 போட்டிகளில் பங்கேற்றுள்ள அந்த அணி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் அந்த அணி 4வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 200 ரன்கள் இலக்கை 16.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. கேப்டன் ரோஹித் சர்மா நிலைத்து நின்று விளையாட தவறுகிறார். கடைசி 5போட்டிகளில் 12 ரன்கள் எடுத்துள்ள அவர், 3 முறை டக்அவுட் ஆகியுள்ளார். அவர் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம்.

எனினும் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், வதேரா, டிம் டேவிட், கேமரூன் க்ரீன் அணிக்கு வலுசேர்க்கின்றனர். காயம் காரணமாக கடந்த இரண்டு ஆட்டங்களில் களம் இறங்காத திலக் வர்மா, இன்றைய போட்டியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டான், பெஹ்ரென்டார்ஃப், பியூஷ் சாவ்லா மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம் என்பதால், மும்பை அணி வெற்றிக்காக கூடுதல் கவனம் செலுத்தும். மொத்தத்தில் இந்த ஆட்டம் மும்பை அணியின் பேட்ஸ்மேன்களுக்கும், குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கும் இடையேயானதாக இருக்கும்.

நேருக்கு நேர்: இரு அணிகளும் இதுவரை 2 போட்டிகளில் மோதியுள்ளன. தலா ஒவ்வொரு வெற்றியை பெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

போட்டி எங்கே?: மும்பை - குஜராத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம், இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

மும்பை உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் க்ரீன், நேஹல் வதேரா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, பெஹ்ரென்டார்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்.

குஜராத் உத்தேச அணி: சுப்மன் கில், சாஹா, ஹர்திக் பண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபிநவ் மனோகர், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.