ETV Bharat / sports

MI vs RR: ஐபிஎல் வரலாற்றில் 1,000-வது போட்டி: வெல்லப்போவது யார்? - மும்பை ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2வது ஆட்டத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Today IPL
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : Apr 30, 2023, 2:22 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டம் 2008ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நடப்பு சீசனில் இன்று (ஏப்ரல் 30) நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இது ஐபிஎல் வரலாற்றில் 1000-ஆமாவது போட்டி. இதற்காக பிசிசிஐ சார்பில் சிறிய விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் இரு அணி கேப்டன்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.

முன்னேறுமா மும்பை?: மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. குஜராத் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் அந்த அணி மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா 2 ரன்கள், இஷான் கிஷன் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். இருவரும் நல்ல தொடக்கத்தைத் தர வேண்டியது அவசியம். கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா நம்பிக்கை அளிக்கின்றனர். ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் உரிய பங்களிப்பை அளித்தால் மட்டுமே, ராஜஸ்தான் அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.

பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் விளையாடாத, ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கலாம். சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா நம்பிக்கை அளிக்கிறார். குஜராத் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 2 ஓவர்கள் வீசி 9 ரன்களை விட்டுக்கொடுத்த அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அவருக்கு டெத் ஓவர்களை வீச வாய்ப்பு அளிக்கலாம். கேப்டன் ரோஹித் இன்று 36வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

அதேநேரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாக உள்ளது. சென்னை அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 77 ரன்களைக் குவித்தார். ஜோஸ் பட்லர், கேப்டன் சாம்சன், ஹெட்மேயர், ஜூரேல், படிக்கல் ஆகியோர் வலுசேர்க்கின்றனர். பந்துவீச்சில் போல்ட், அஸ்வின், ஹோல்டர், சந்தீப் சர்மா சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர்.

மும்பை உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேகல் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, அர்ஜூன் டெண்டுல்கர், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரென்டார்ஃப்.

ராஜஸ்தான் உத்தேச அணி: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), படிக்கல், ஹெட்மேயர், ஜூரெல், அஸ்வின், ஹோல்டர், போல்ட், சந்தீப் சர்மா, சாஹல், குல்தீப் யாதவ்.

போட்டி எங்கே?: மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

Kings vs Super Kings
கிங்ஸ் vs சூப்பர் கிங்ஸ்

கிங்ஸ் vs சூப்பர் கிங்ஸ்: இந்நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நடப்பு சீசனில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் களம் இறங்குகிறது. கெய்க்வாட், கான்வே, ரகானே, துபே ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்தாலும், அம்பதி ராயுடு ஃபார்மை இழந்து தவிக்கிறார். பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே (14 விக்கெட்), ஜடேஜா (11), மொயீன் அலி (7) ஆகியோர் வலுசேர்க்கின்றனர். பதிரானா பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் 48 ரன்களை வாரி வழங்கினார்.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை 8 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது. லக்னோ அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் தைடே 66 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று விளையாடத் தவறினர். ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே சென்னை அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

சென்னை உத்தேச அணி: கான்வே, கெய்க்வாட், ரகானே, மொயீன் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா, ஆகாஷ் சிங்.

பஞ்சாப் உத்தேச அணி: ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், அதர்வா தைடே, சிக்கந்தர் ராசா, லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் பிரார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.