ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்றது.
சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடி வெற்றிக்கனியைப் பறித்தார். இந்தத் தொடரில் நடந்த நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி, தற்போது இரண்டாவது வெற்றியை ருசித்துள்ளது. அதே சமயம், தொடர்ந்து மூன்று தோல்விகளைச் சந்தித்த கொல்கத்தா அணிக்கு இது நான்காவது தோல்வி ஆகும்.
இந்தப் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், "கடந்த 4-5 போட்டிகளில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசிவருகிறார்கள். கிறிஸ் மோரிஸ் பெரிய பேட்ஸ்மேன்களை வெளியேற்ற விரும்பினார்.
-
That's that from Match 18 of #VIVOIPL as @rajasthanroyals win by 6 wickets to register their second win of the season.
— IndianPremierLeague (@IPL) April 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard - https://t.co/ouszimFkdo #RRvKKR pic.twitter.com/JcLflXxXzT
">That's that from Match 18 of #VIVOIPL as @rajasthanroyals win by 6 wickets to register their second win of the season.
— IndianPremierLeague (@IPL) April 24, 2021
Scorecard - https://t.co/ouszimFkdo #RRvKKR pic.twitter.com/JcLflXxXzTThat's that from Match 18 of #VIVOIPL as @rajasthanroyals win by 6 wickets to register their second win of the season.
— IndianPremierLeague (@IPL) April 24, 2021
Scorecard - https://t.co/ouszimFkdo #RRvKKR pic.twitter.com/JcLflXxXzT
சூழ்நிலைக்கு ஏற்றவாறு இன்று நான் விளையாடியிருக்கிறேன். இதைத் தான் கடந்த சீசனில் கற்றுக்கொண்டேன். நீங்கள் அதிரடியாக விளையாடி விரைவில் அரைசதம் அடித்தும் வெற்றிபெறவில்லை என்றால் நீங்கள் மோசமாக உணர்வீர்கள்.
சேதன் சக்காரியா உண்மையிலேயே சிறந்த வீரர். அவர் எங்களுக்கு மேலும் பல வெற்றிகளைப் பெற்றுதரப் போகிறார். ஆனால் இவர் தொடர்ந்து விளையாடிவருவதால் அவருக்கு ஒரு போட்டியில் ஓய்வு கொடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தல தோனியை எதிர்க்கும் கிங் கோலி - நம்பர் 1 இடத்திற்குப் போட்டி!