ETV Bharat / sports

மும்பையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஹைதராபாத்! - srh into the playoffs

ஷார்ஜா: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஹைதராபாத் அணி தகுதி பெற்றது.

வார்னர் - சஹா கூட்டணி
வார்னர் - சஹா கூட்டணி
author img

By

Published : Nov 3, 2020, 11:10 PM IST

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா மீண்டும் இந்தப் போட்டியில் களமிறங்கினார். இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்காக கேப்டன் வார்னர் - சஹா இணை களமிறங்கியது. இந்த இணை முதல் ஓவர் மட்டுமே அடக்கி வாசித்தது. இரண்டாவது ஓவரில் கவுல்டர் நைல் வீசிய மூன்றாவது பந்தில் சிக்சர், பவுண்டரி என தொடர்ந்து அடித்த சஹா, அதன் பின்னர் திரும்பிப் பார்க்கவே இல்லை. தொடர்ந்து மூன்றாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை சஹா விரட்ட, பதிலுக்கு கேப்டன் வார்னர் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து ஆட்டத்திற்குள் வந்தார்.

ஆட்டத்தின் ஒவ்வொரு ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என இருவரும் சத்தியம் செய்து வந்துவிட்டார்களோ என்னவோ, பவர் ப்ளேவின் அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகள் வரிசைக்கட்டின. பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது ஹைதராபாத்.

வார்னர் - சஹா கூட்டணி
வார்னர் - சஹா கூட்டணி

பவர் ப்ளே முடிந்துவிட்டது கொஞ்சம் நிதானமாக ஆடுவார்கள், ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என மும்பை அணியினர் எண்ணிய நேரத்தில் பவர் ப்ளேவிற்கு பின் வார்னர் - சஹா கூட்டணி இன்னும் உக்கிரமாக அடிக்கத் தொடங்கியது. 10 ஓவர்களில் இந்த அணி 89 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் சிக்சர் அடித்து கேப்டன் வார்னர் அரைசதம் அடிக்க, அதே ஓவரில் சஹாவும் அரைசதம் கடந்தார்.

இந்த வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் துவண்டு போயினர். இதனால் கடைசி 6 ஓவரில் ஹைதராபாத் அணி 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. 15 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 137 ரன்கள் எடுத்தது. இறுதியாக ஹைதராபாத் அணி 17.1 ஓவர்களில் 151 ரன்களை எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதோடு, ப்ளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியது.

இந்நிலையில், ப்ளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டரில் ஆர்சிபி அணியை ஹைதராபாத் அணி எதிர்கொள்ளவுள்ளது.

இதையும் படிங்க: என் கனவுகளுடன் நிஜத்தில் வாழ்ந்தது நற்பேறுதான்: வாட்சன் ஃபேர்வெல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.