ஐபிஎல் தொடரில் இன்று (அக்.18) நடைபெற்று வரும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணியின் குயின்டன் டி காக் அதிகபட்மாக 43 பந்துகளுக்கு 53 ரன்களை குவித்தார்.
அவரைத் தொடர்ந்து குர்னால் பாண்டியா 30 பந்துகளுக்கு 34 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 4 பந்துகளுக்கு 8 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதைத்தொடரந்து களமிறங்கிய ட்ரெண்ட் போல்ட் 12 பந்துகளுக்கு 34 ரன்களையும், நாதன் குல்டர் நைல் 12 பந்துகளுக்கு 24 ரன்களையும் குவித்து அணிக்கு வலுசேர்ந்தனர். அப்படி 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 176 ரன்களை எடுத்து பஞ்சாப் அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு!