ETV Bharat / sports

ஐபிஎல் இறுதிப்போட்டி: மும்பை 157 அணிக்கு ரன்கள் இலக்கு!

துபாய்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணி வெற்றிபெறுவதற்கு 157 ரன்களை இலக்காக டெல்லி அணி நிர்ணயித்துள்ளது.

ipl-final-delhi-fixed-a-target-of-156-runs-for-mumbai

author img

By

Published : Nov 10, 2020, 9:18 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

பின்னர் டெல்லி அணிக்காக ஸ்டோய்னிஸ் - தவான் இணை தொடக்கம் கொடுத்தது. இந்தப் போட்டிக்கு முன்பாக டெல்லி அணியின் ஹல்க், துப்பாக்கி, புல்லட் என ஸ்டோய்னிஸ் பற்றி அனைவரும் பேசிவந்தனர். இதற்கேற்ப ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டெல்லி அணிக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைய, தொடர்ந்து வந்த ரஹானே, 2 ரன்களில் போல்ட் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

முதல் பந்திலேயே ஸ்டோய்னிஸை வீழ்த்திய போல்ட்

இதன்பின் தொடக்க வீரர் தவான் நன்றாக ஆடிவந்த நிலையில், ஜெயந்த் யாதவ் பந்தில் அவரும் 15 ரன்களில் போல்டாக டெல்லி அணியின் நிலை பரிதாபமானது. டாஸ் போடும்போது டெல்லி அணியில் அதிக அளவிலான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஜெயந்த் யாதவ் அணியில் இடம்பிடித்தார் என்று ரோஹித் கூறியிருந்தார். அதற்கேற்ப அவரும் தவானின் விக்கெட்டை வீழ்த்தி நம்பிக்கையைக் காப்பாற்றினார்.

ஜெயந்த் யாதவ் பந்தில் போல்டான தவான்
ஜெயந்த் யாதவ் பந்தில் போல்டான தவான்

பின்னர் இணைந்த ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் கூட்டணி நிதானமாக ஆடியது. எவ்வித தேவையில்லாத ஷாட்களையும் ஆடாமல், டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டைம் அவுட் முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், குர்ணால் பாண்டியா வீசிய ஓவரில் ரிஷப் பண்ட் இரண்டு சிக்சர்களை அடித்து டெல்லி அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் இழுத்துவந்தார். அங்கிருந்து டெல்லி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

ஸ்ரேயாஸ் - பண்ட்
ஸ்ரேயாஸ் - பண்ட்

இதற்கிடையே ஒரு ஓவரை பும்ரா வீசியும் இவர்களின் விக்கெட்டினை வீழ்த்த முடியவில்லை. இரு இளம் வீரர்களும் அதிரடியில் கலக்க, 13 ஓவர்களில் டெல்லி அணி 100 ரன்களை கடந்தது. அதிரடியாக ஆடிய பண்ட், இந்தத் தொடரின் முதல் அரைசதத்தை சரியான நேரத்தில் பதிவு செய்தார்.

அரைசதம் அடித்த பண்ட்
அரைசதம் அடித்த பண்ட்

பின்னர் அதிரடிக்கு மாறிய பண்ட் கவுல்டர் நைல் வீசிய பந்தில் 56 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த ஹெட்மயர் 5 ரன்களில் பெவிலியன் திரும்ப, நல்ல ஸ்கோரை எட்ட வேண்டிய பொறுப்புகள் அனைத்தும் கேப்டனின் கைகளுக்கு சென்றது.

ஆனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. கடைசி வரை நின்று போராடிய ஸ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: ’கோலி இல்லைனா என்ன... மேட்ச் பட்டாசா இருக்கும்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.