ETV Bharat / sports

ஐபிஎல் 2020: நேருக்கு நேர்...! ஆர்ஆர் vs கேகேஆர்! - KKR vs RR match updates

ஐபிஎல் தொடரில் இன்று (செப்.30) நடைபெறவுள்ள 12ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

IPL 2020: Rajasthan on hat-trick of wins, KKR out to stop their run

author img

By

Published : Sep 30, 2020, 4:08 PM IST

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரில் 13ஆவது சீசன் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறவுள்ள 12ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியானது, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. பட்லர், சாம்சன், ரஸ்ஸல், நரைன் என சிக்சர் மன்னர்கள் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

இந்த சீசனின் முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றியுடன் தொடங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இன்றைய போட்டியிலும் வெற்றியை ஈட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதிலும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் இமாலய இலக்கை எட்டியும் அசத்தியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

அந்த அணியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், திவேத்தியா, ஆர்ச்சர் என அனைவரும் பேட்டிங்கில் அசத்தி வருவதால், இந்த சீசனின் மிகவும் வலிமை மிக்க அணியாகவும் ராஜஸ்தான் கருதப்படுகிறது. பந்துவீச்சிலும் டாம் கர்ரன், ஆர்ச்சர், உனாத்கட் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் ராஜஸ்தான் அணி இந்த சீசனில் புதிய ஒரு அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர்

மேலும் அணிக்கு திரும்பியுள்ள ஜோஸ் பட்லர் முதல் போட்டியில் சொதப்பியிருந்தாலும், அவருடைய அதிரடியான பேட்டிங் திறன் இன்றைய போட்டியில் வெளிப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்றையப் போட்டியில் பட்லர் நிறைவேற்றுவாரா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

மும்பை அணியுடனான முதல் போட்டியில் கேகேஆர் அணி தோல்வியைத் தழுவினாலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று "கம்பேக்" கொடுத்துள்ளது. அதிலும் இளம்வீரர் சுப்மன் கில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை களத்திலிருந்து வெற்றிப் பெற்றுத்தந்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இருப்பினும் ரஸ்ஸல், நரைன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்புவதால், இன்றையப் போட்டியில் அவர்கள் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். அதேசமயம் இயன் மோர்கன், நிதீஷ் ராணா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை தோல்வியிலிருந்து மீட்க உதவி வருகின்றனர்.

வருண் சக்ரவர்த்தி
வருண் சக்ரவர்த்தி

பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், ராஜஸ்தான் அணிக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்துவர். அதேசமயம் குல்தீப், சுனில் நரைன் என நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு கேகேஆர் அணிக்கு வெற்றியைப் பெற உதவியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நேருக்கு நேர்:

ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 10 முறையும், கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றியைப் பெற்று, சமமான அளவில் உள்ளது. சம பலத்துடன் உள்ள இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால், இன்றைய அட்டம் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்
நேருக்கு நேர்

மைதானம்:

இன்றைய போட்டி நடைபெறவுள்ள துபாய் மைதானமானது பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானமாகும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த மைதானத்தில் நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகள் சூப்பர் ஓவர் வரை சென்றுள்ளதால், இன்றைய போட்டியிலும் அதிரடிக்கு பஞ்சமிருக்காது.

துபாய் சர்வதேச மைதனாம்
துபாய் சர்வதேச மைதானம்

உத்தேச அணி:

ஆர்ஆர்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, டாம் கர்ரன், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட், ராகுல் திவேத்தியா, அங்கித் ராஜ்புட்.

கேகேஆர்: தினேஷ் கார்த்திக் (கே), சுனில் நரைன், சுப்மன் கில், நிதீஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கம்ளேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஷிவம் மாவி.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டெல்லியைப் பந்தாடி முதல் வெற்றியைப் பதிவுசெய்த ஹைதராபாத்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.