ஐபிஎல் தொடரில் இன்று (அக்டோபர் 24) நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு என்பதால் இரு அணிகளும் கடுமையாக போராடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியாம் கார்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சம்த், ரஷித் கான், நடராஜன், சபாஷ் நதீம், சந்தீப் சர்மா.
பஞ்சாப்: கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் (கேப்டன்),மந்தீப் சிங், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டன், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: அதிரடியில் அசத்திய ராணா, நரைன்...! டெல்லி அணிக்கு இமாலய இலக்கு!