ETV Bharat / sports

ஐபிஎல்-லில் எனது பணி என்ன என்பதில் தெளிவு இல்லை - கிளென் மேக்ஸ்வெல்! - கிளென் மேக்ஸ்வெல்

ஐபிஎல் தொடரில் தனது பணி மற்றும் ஆட்டத்தில் எந்த வரிசையில் களமிறங்குவது என்பது குறித்த தெளிவு இல்லை என ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

IPL 2020: Not sure about my role in IPL, says Glenn Maxwell

author img

By

Published : Oct 14, 2020, 10:30 PM IST

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கு பெயர்போன இவர், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் படி எதையும் செய்ததில்லை.

இந்நிலையில் மேக்ஸ்வெல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஐபிஎல் தொடரில் எனது பணி என்ன என்பது குறித்த தெளிவு இல்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மேக்ஸ்வெல், “ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடும் போது, ஐபிஎல் தொடரில் எனது பணி என்ன என்பது எனக்கு தெளிவாக விளங்கவில்லை. ஏனெனில் சர்வதேச போட்டிகளில் எனது ஆட்டம் எவ்வாறு அமையும், எந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என்ற தெளிவு இருக்கும்.

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில், எனது பேட்டிங் வரிசையானது போட்டிக்கு போட்டி மாறுபடுகிறது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. இதுவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இப்படி மாற்றங்கள் செய்யப்படுவது இல்லை. அதனால் எங்களுடைய பணி என்ன என்பது குறித்த தெளிவு எங்களிடம் இருக்கும்.

அதேசமயம் ஐபிஎல் தொடரைப் பொறுத்தமட்டில் நாங்கள் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒன்றாக செயல்பட வேண்டியுள்ளது. அதனால் ஒவ்வொரு போட்டியின் போதும் அணியில் நாங்கள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தோனியின் அக்ரஸிவ்; முடிவை மாற்றிய அம்பயர்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.