ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியின் மூலமாக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல், ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இந்நிலையில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது பந்துவீச பெங்களூரு அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டதினால், அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதித்து ஐபிஎல் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துபாயில் நேற்று (செப்.24) நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, பெங்களூரு அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது.
இது ஐபிஎல் நடத்தை விதிகளின்படி குற்றமாகும். மேலும் இந்த சீசனில் ஆர்சிபி அணியின் முதல் குற்றம் இது என்பதால், அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு குறைந்தபட்ச அபராதமாக ரூ.12 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இரண்டாவது வெற்றிக்கு மல்லுக்கட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்