நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இதற்கு பேட்ஸ்மேன்களான மனீஷ் பாண்டே, விஜய் சங்கர் ஆகியோர் விக்கெட் கொடுக்காமல் பேட்டிங் ஆடியது முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சின்போது இந்த சீசனில் முதல் போட்டியில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, ராபின் உத்தப்பாவை ரன் அவுட் செய்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கு காரணமாக இருந்தார். இதனால்தான் ராஜஸ்தான் அணியை 154 ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது.
இந்த ஆட்டம் முடிந்து விஜய் சங்கர் - ஜேசன் ஹோல்டர் ஆகியோர் உரையாடினர். அப்போது ஹோல்டர் கூறுகையில், ''இந்த ஆட்டத்தில் எனது ஆட்டம் பற்றி யோசிக்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஐபிஎல் ஆடி நீண்ட காலம் ஆகிவிட்டது.
ஐபிஎல் தொடரில் ஆடுவதற்காக நீண்ட காலமாக காத்திருந்தேன். தற்போது வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி. கிடைத்த வாய்ப்பில் என்னால் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது இன்னும் நிறைவாக உள்ளது'' என்றார்.
இதனைத்தொடர்ந்து விஜய் சங்கர் கூறுகையில், ''இதுபோன்ற ஒரு உத்வேகமான ஆட்டத்திற்காகத்தான் நான் காத்திருந்தேன். நான் பயிற்சிகளில் சிறப்பாக ஆடுகிறேன். இந்த ஆட்டத்திற்கு முன்பாக 18 பந்துகளை மட்டுமே இந்த சீசனில் எதிர்கொண்டுள்ளேன்.
-
From one champ to another 🤝🧡#RRvSRH #OrangeArmy #KeepRising #Dream11IPL pic.twitter.com/FPoe1olNLf
— SunRisers Hyderabad (@SunRisers) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">From one champ to another 🤝🧡#RRvSRH #OrangeArmy #KeepRising #Dream11IPL pic.twitter.com/FPoe1olNLf
— SunRisers Hyderabad (@SunRisers) October 23, 2020From one champ to another 🤝🧡#RRvSRH #OrangeArmy #KeepRising #Dream11IPL pic.twitter.com/FPoe1olNLf
— SunRisers Hyderabad (@SunRisers) October 23, 2020
அதனால் களமிறங்கிய சில நேரம் ப்ரஷர் இருந்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும் என்பதோடு எனக்கு இது முக்கியான போட்டி. மறுமுனையில் மனீஷ் பாண்டே அதிரடியாக ஆடினார். ஒரு அணியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்'' என்றார்.
இதையும் படிங்க: ஜாதவ் செய்த மேஜிக்... மீண்டும் பால்தான்ஸை வீழ்த்துமா சிஎஸ்கே?