ETV Bharat / sports

ஐபிஎல் 2020: ஹைதராபாத் அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 167 ரன்களை குவித்தது.

IPL 13 -SRH vs CSK innings break
IPL 13 -SRH vs CSK innings break
author img

By

Published : Oct 13, 2020, 9:14 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 29ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வழக்கத்திற்கு மாறாக சாம் கர்ரன் - பாப் டூ பிளேசிஸ் இணை இன்றைய போட்டியிக் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்.

இருப்பினும் இதில் டூ பிளேசிஸ் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம் கர்ரனும் 31 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த வாட்சன் - ராயுடு இணை நிதான அட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராயுடு 41 ரன்களிலும், வாட்சன் 42 ரன்களிலும் அட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களையும், அம்பத்தி ராயுடு 41 ரன்களை எடுத்தனர்.

இதையும் படிங்க:ரொனால்டோவுக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.