ஐபிஎல் தொடரில் இன்று (அக்.22) 40ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்மித் தலமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே சறுக்கலாக ராபின் உத்தப்பா சொற்ப ரன்களில் அட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த சாம்சன் - ஸ்டோக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
பின்னர் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 36 ரன்கள் எடுத்திருந்த சஞ்சு சாம்சனும் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.
பின்னர் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த ஸ்மித், எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்த ரியான் பராக்கும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 36 ரன்களையும், ஸ்டோக்ஸ் 30 ரன்களையும் எடுத்தனர்.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்க உள்ளது.
இதையும் படிங்க: நவம்பரில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர்!