ETV Bharat / sports

ஐபிஎல் 2020 : ஹைதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு! - பஞ்சாப் vs ஹைதராபாத் தகவல்கள் நேரலை

பஞ்சாப் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 126 ரன்களை எடுத்தது.

IPL 13 - KXIP vs SRH innings break
IPL 13 - KXIP vs SRH innings break
author img

By

Published : Oct 24, 2020, 9:24 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.24) நடைபெற்று வரும் 43ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீசத் தீர்மானித்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு மந்தீப் சிங்-கே.எல்.ராகுல் இணை சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இதில் மந்தீப் சிங் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த கிறிஸ் கெய்லும் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலும் 27 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த நிக்கோலஸ் பூரான், பவுண்ரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதனால் 20 ஓவர்களின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 30 ரன்களை எடுத்தார். ஹைதராபாத் அணி தரப்பில் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையும் படிங்க:"தீப்பெட்டி தொழிலாளி மகன் டூ இந்திய ஜூனியர் ஹாக்கி வீரர்"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.