ETV Bharat / sports

ஐபிஎல் 2020 : பெங்களூரை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - CSK vs RCB live updates

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.10) இரவு நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளது.

Inconsistent CSK clash with RCB
Inconsistent CSK clash with RCB
author img

By

Published : Oct 10, 2020, 4:53 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்த சீசனில் படுதோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல்
ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

சென்னை சூப்பர் கிங்ஸ்:

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி, இரண்டு வெற்றி, நான்கு தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கிறது.

சீசன் தொடக்கத்தில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், தற்போது நடுவரிசை வீரர்களும் இணைந்து வெற்றி பெற வேண்டிய போட்டிகளைக் கூட தோல்விக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

இதனால் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் மாற்றங்கள் வரவேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் கேகேஆர் அணியுடனான போட்டியின்போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை தோல்வியடைச் செய்த கேதார் ஜாதவை அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பெரும்பாலான ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

பந்துவீச்சுத் தரப்பில் கடந்த போட்டியில் கரண் சர்மா தனக்கு கிடைத்த வாய்ப்பைத் சரியாக பயன்படுத்தி, பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியைத் தந்தார். வேகப்பந்துவீச்சில் சாம் கர்ரன், டுவைன் பிராவோ, சர்துல் தாக்கூர் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகின்றனர். இன்றைய போட்டியில் பெங்களூரு அணியை சிஎஸ்கே சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, இந்த சீசனில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறது. அந்த அணியின் தேவ்தத் படிகல், ஆரோன் பிஞ்ச், விராட் கோலி, டி வில்லியர்ஸ் என அதிரடி வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இன்றைய போட்டியிலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மேலும் இன்றைய போட்டியில், தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரீஸ் அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது. ஏனெனில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் ஆர்சிபி அணி, பந்துவீச்சில் கோட்டை விட்டு வருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இதனால் இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் பல்வேறு மாற்றங்களை பெங்களூரு அணி கொண்டுவரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர். இன்றைய ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அணி சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நேருக்கு நேர்:

சென்னை, பெங்களூரு அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் ஒரு போட்டி முடிவின்றி அமைந்துள்ளது.

நேருக்கு நேர்
நேருக்கு நேர்

உத்தேச அணி:

சிஎஸ்கே: ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, ஜெகதீசன், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டுவைன் பிராவோ, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், கரன் சர்மா, ஷர்துல் தாக்கூர்.

ஆர்சிபி: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், கிறிஸ் மோரிஷ், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர்,குர்கீரத் சிங் மான், இசுரு உதனா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ் யுஸ்வேந்திர சஹால்.

இதையும் படிங்க:தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட அவலம் : கொந்தளிப்பில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.