உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 18 வயதான கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இடது கை ஆட்டக்காரரான இவர், தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றவர்.
இவர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கியுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சிறிய வயதில் பயிற்சி அளித்த ஜ்வாலா சிங் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு நேர்கானலில் என்று தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத்திடம் பேசிய ஜ்வாலா சிங், "யஷ்வி ஜூனியர் கிரிக்கெட்டில் இருந்து தற்போது சீனியர் கிரிக்கெட் உலகில் நுழைந்துள்ளார். எனவே, இப்போது அவர் தன்னை பற்றி நிரூபிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன" என்றார்.
ஐக்கிய அமீரகத்தில் ஆடுவது குறித்து பேசிய ஜ்வாலா சிங், "அனைத்து வீரர்களும் நீண்ட நாள்களுக்கு பின் களத்திற்கு திரும்பியுள்ளனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே சில போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
எந்தவொரு வீரரும் 20-25 நாள்களுக்குள் கிரிக்கெட் போட்டிக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியும். இருப்பினும், ஆட்டத்தின்போது பல்வேறு அழுத்தங்களை அவர்கள் எதிர்கொள்ள நேரும். இந்தத் தொடரில் யஷஸ்வி சிறப்பாக செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன்.
தொடக்கத்தில் செட்டில் ஆக அவர் சிறிது நேரம் எடுப்பார், ஆனால் அதன் பின் ரன்களை மளமளவென்று குவிக்கத் தொடங்கிவிடுவார்" என்றார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020 : சிஎஸ்கேவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!