ஐபிஎல் தொடரில் இன்று (அக்.04) நடைபெற்று வரும் 18ஆவது லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த மயங்க் 26 ரன்களில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 26 ரன்களை சேர்த்து பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் அரைசதமடித்து அசத்தினார்.
ராகுலுடன் இணைந்த நிக்கோலஸ் பூரானும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 63 ரன்களை எடுத்திருந்தார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை அசத்தல் வெற்றி!