ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் - நிதீஷ் ராணா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுப்மன் கில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுனில் நரைனும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த நிதீஷ் ராணா, சென்னை அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு அசத்தினார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 10ஆவது அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த ராணா 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.
பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் - இயன் மோர்கன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதீஷ் ராணா 87 ரன்களை எடுத்திருந்தார்.
இதையும் படிங்க:முதல் ஒருநாள் போட்டிக்கான பாக்., அணி அறிவிப்பு!