ETV Bharat / sports

ஐபிஎல் 2019: ரஸ்ஸின் வெறித்தனமான பேட்டிங்; கடைசி 3 ஓவரில் 55 ரன்கள்! கொல்கத்தா 218 ரன்கள் குவிப்பு

author img

By

Published : Mar 27, 2019, 10:22 PM IST

Updated : Mar 28, 2019, 7:38 PM IST

கொல்கத்தா: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 218 ரன்களை குவித்துள்ளது.

17 பந்துகளில் 48 ரன்களை விளாசிய ரஸ்ஸல்

12வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் அஷ்வின்தலைமையிலான பஞ்சாப் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. கடந்த போட்டியில் வெற்றிபெற்ற அதே வீரர்களுடன்கொல்கத்தா அணி இன்றைப் போட்டியில் களமிறங்கியுள்ளது.

மறுமுனையில் பஞ்சாப் அணியில் நான்கு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அணியில் நிகோலஸ் பூரான், சாம் கரன்,அன்கிட் ராஜ்பூட், முஜிப்-உர்-ரஹ்மான் ஆகியோருக்கு பதிலாக டேவிட் மில்லர், ஹர்துஸ் வில்ஜோயின் (Hardus Viljoen), வருண் சக்ரவர்த்தி, ஆன்ட்ரூவ் டை ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போட்டியின் மூலம், ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு விலைக்கு போன வருண் சக்ரவர்த்தி, ஹர்துஸ் வில்ஜோயின் ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர்.

ஒரே ஓவரில் 25 ரன்:

இதைத்தொடர்ந்து, கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் கிறிஸ் லின் ஒரு ரன்னை மட்டுமே எடுத்தாலும், வருண் சக்ரவர்த்தி வீசிய இரண்டாவது ஓவரில் சுனில் நரைன் ஒரு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என 25 ரன்களை விளாசினார்.

இதையடுத்து, கிறிஸ் லின் (10), சுனில் நரைன் (24) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க கொல்கத்தா அணியின் ஸ்கோர் 3.3 ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்களை எடுத்திருந்த நிலையில், உத்தப்பா - நிதிஷ் ராணா மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர்.

நிதிஷ் ராணாவின் அதிரடி:

KKRvKXIP
Rana Scored 67 runs

நிதிஷ் ராணா தொடக்கத்தில் தடுமாறினாலும் சிறிது நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதனிடையே, உத்தாப்பாவும் அவ்வபோது பவுண்டரிகளை விளாசினார்.

இவ்விரு வீரர்கள் மூன்றாவது விக்கெட்டுக்கு 110 ரன்களை சேர்த்த நிலையில், நிதிஷ் ராணா 67 ரன்களில் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனால், கொல்கத்தா அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்களை எடுத்திருந்தது.

ஆட்டத்தை மாற்றிய நோபால்:

முகமது ஷமி வீசிய 17ஆவது ஓவரின் கடைசி பந்தில் ரஸ்ஸல் கிளின் போல்ட் ஆனார். ஆனால், மூன்று ஃபீல்டர்கள் மட்டுமே 30 யார்ட்ஸ் சர்க்கிலில் இருந்ததால், நடுவர் நோபால் என அறிவித்தார். அதற்கு, மிஞ்சிய மூன்று ஓவர்களில் ரஸ்ஸல் வெறித்தனமான பேட்டிங்கை வெளிபடுத்தினார்.

ஆன்ட்ரூவ் டை வீசிய 18வது ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்களை விளாசினார். ஷமி வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸ், ஒரு பவுண்ட்ரி என இரண்டு ஓவர்களில் 47 ரன்களை விளாசியது கொல்கத்தா அணி.

இறுதி ஓவரில் ஆன்ட்ரூவ் டையின் பந்துவீச்சில் ரஸ்ஸல் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். 17பந்துகளில் அவர் 3 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசினார்.

Intro:Body:Conclusion:
Last Updated : Mar 28, 2019, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.