ETV Bharat / sports

மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டில் களமிறங்கும் மனோஷ் திவாரி? - ஹர்ஷல் படேல்

டெல்லி: காயம் காரணமாக, டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக இந்திய வீரர் மனோஷ் திவாரி சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மனோஷ் திவாரி
author img

By

Published : Apr 11, 2019, 11:56 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்நிலையில், டெல்லி அணியின் பந்துவீச்சாளரான ஹர்ஷல் படேல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, ஹர்ஷல் படேலின் வலது கையில் காயம் எற்பட்டிருந்தது. இந்தத் தொடரில் டெல்லி அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.

இந்நிலையில், ஹர்ஷல் படேலுக்கு மாற்று வீரராக டெல்லி அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது மனோஷ் திவாரி தீவிரமாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் (கொல்கத்தா, புனே) அணிகளுக்காவும் தான் சிறப்பாக ஆடியுள்ளேன். இருப்பினும் இம்முறை ஐபிஎல் ஏளத்தில் என்னை ஏன் எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பது குறித்து தெரியவில்லை என அவர் சோகத்துடன் ட்விட்டர் பகத்தில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.