ETV Bharat / sports

ஐபிஎல்: மழையால் மாறிப்போன போட்டி முடிவு! - மழை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழைக் காரணமாக எந்த ஒரு முடிவுமின்றி கைவிடப்பட்டது.

RCBvsRR
author img

By

Published : May 1, 2019, 10:50 AM IST

12ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னை, டெல்லி ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், மற்ற அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த போட்டியிட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் தான் பிளேஆப் வாய்ப்பை தக்க வைக்கமுடியும் என்ற கட்டாய சூழ்நிலையில் ராஜஸ்தான் அணி மாட்டியிருந்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் ஆட்டம் தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன் மழை பெய்ய தொடங்கியதால் போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்படும் என்பதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். எனினும் மழை நின்ற பின் இரு அணிகளுக்கும் தலா 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி இரவு 11 மணிக்கு மேலாகத் தொடங்கியது.

முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி-டிவில்லியர்ஸ் ஜோடி முதல் ஓவரிலேயே 23 ரன்கள் எடுத்து அசத்தினர். பின்னர், ஸ்ரேயாஸ் கோபால் வீசிய இரண்டாவது ஓவரிலும் அதிரடியைத் தொடர்ந்த கோலி 25 ரன்களுடன் நான்காவது பந்தில் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து டிவில்லியர்ஸ் 10, ஸ்டோய்னிஸ் 0 என வெளியேறியதால், ஸ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட் எடுக்க நேரிட்டது.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. இதனால் பெங்களூரு அணி 5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் லயம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறப்பாக ஆடி 3 ஓவரில் 40 ரன்கள் குவித்தனர். நான்காவது ஓவரில் சாஹல் பந்துவீச்சில் நெகிடியிடம் பிடிபட்டார் சாம்சன். ராஜஸ்தான் அணி 3.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் குவித்திருந்தபோது, மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் ராஜஸ்தான் அணி 11 புள்ளிகள் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு இன்றும் ஒரு போட்டி உள்ளதாலும், பிற அணிகளின் போட்டி முடிவுகளை பொறுத்தே அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும். பெங்களூரு அணி இந்த தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.