ETV Bharat / sports

ரபாடா வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத பெங்களூரு பேட்ஸ்மேன்கள்! - Rabada

பெங்களூரு : டெல்லி அணி வெற்றிபெற 150 ரன்களை இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.

ரபாடா
author img

By

Published : Apr 7, 2019, 5:50 PM IST

இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு - டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பெங்களூரு அணியை பேட்டிங் ஆடப் பணித்தார்.

பின்னர் பெங்களூரு அணியின் சார்பில், பார்த்திவ் படேல் - விராட் கோலி இணை தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 16 ரன்கள் சேர்த்த நிலையில், பார்த்திவ் படேல் 9 ரன்களில் ஆட்டமிழக்க, நட்சத்திர இணையான விராட் கோலி - டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தது.

virat
டெல்லி அணி

இந்த இணை டெல்லி அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொள்ள, ரபாடா வீசிய பந்தில் டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து வந்த ஸ்டோனிஸ் 17 பந்துகளில் 156 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பெங்களூரு அணி 66 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

virat
இங்ரம்

இதனையடுத்து, விராட் கோலி - மொயின் அலி இணை டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்த்து சிறப்பாக ஆடியது. மொயின் அலி அதிரடியாக ரன்கள் சேர்த்த நிலையில், லெமிச்சானே பந்தில் 32 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கோலி 41 ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூரு ரசிகர்களின் நம்பிக்கை தகர்ந்தது.

virat
விராட் கோலி

இவரைத் தொடர்ந்து வந்த அக்‌ஷ்தீப் நாத் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த டெய்லண்டர்கள் யாரும் பெரிதாக சோபிக்காததால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளும், மோரிஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.