ETV Bharat / sports

இன்றாவது முதல் வெற்றியைப் பெறுமா கோலியின் பெங்களூரு படை? - parthiv patel

மொகாலி : அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடுகிறது.

IPL
author img

By

Published : Apr 13, 2019, 1:44 PM IST

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடக்கம் முதலே பெங்களூரு அணிக்கு சோதனையாக இருந்து வருகிறது. இதுவரை பெங்களூரு அணி விளையாடிய ஆறு போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

விராட் கோலி, டி வில்லியர்ஸ், பார்த்திவ் படேல், ஸ்டோனிஸ், மொயின் அலி, சாஹல், டிம் சவுதி என நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லாத நிலையில், தொடர்ந்து தோல்விகளைப் பெற்று வந்தது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மற்ற அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அட்டகாசப்படுத்தி வரும் நிலையில், அதிகம் எதிர்பார்த்த பெங்களுரு அணியின் ஹெட்மயர் நான்கு போட்டிகளில் விளையாடி 26 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை துயரப்பட வைத்துள்ளார்.

பந்துவீச்சில் சாஹஸ் அற்புதமாக வீசினாலும், இவருடன் கூட்டணி அமைத்து பந்துவீச வீரர்கள் இல்லாமல் பெங்களூரு அணி தவித்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் பெங்களூரு அணி வீரர்களான கெய்ல், ராகுல், சர்ஃபராஸ் கான், மன்தீப் சிங், மயங்க் அகர்வால் ஆகியோர் தற்போது பஞ்சாப் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை மிக வலுவாக உள்ள நிலையில் சொந்த மண்ணில் களமிறங்குவதால் மிகப்பெரிய இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் கேப்டன் அஸ்வின் இந்தத் தொடர் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இவருடன் இணைந்து முஜீப் உர் ரஹ்மான் முன்னணி வீரர்களை தனது சுழற் பந்துகளால் அச்சுறுத்தி வருகிறார். மேலும், முகமது ஷமி, முருகன் அஸ்வின், ஆண்ட்ரூ டை, ஹாட்ரிக் புகழ் சாம் கரண் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை அணிக்கு கொடுத்து வருகிறார்கள்.

மேலும் பெங்களூரு அணிக்காக பல அற்புதமான இன்னிங்ஸுகளை கொடுத்த கெய்லை, பெங்களூரு நிர்வாகம் கழட்டிவிட்ட நிலையில், தற்போது பஞ்சாப் அணிக்காக சிறப்பாக ஆடிவரும் கெய்ல் இந்தப் போட்டியில் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பஞ்சாப் அணியை எதிர்த்து முதல் வெற்றியைப் பெற பெங்களூரு அணி போராடும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Intro:Body:

IPL - KXIP vs RCB in mohali

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.