தற்போது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்துவரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் மன்கட் முறையை பயன்படுத்தி, ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தார்.
இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது. கிரிக்கெட் ரசிகர்கள், மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களும் அஸ்வின் மன்கட் முறையை பயன்படுத்தியதற்கு விமர்சனம் செய்துவந்தனர்.
எனினும் சில கிரிக்கெட் வீரர்கள் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி அணியில் ஆடிவரும் நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் கூறியதாவது:
இதுபோன்ற சுவாரஷ்யமான விஷயங்கள் கிரிக்கெட்டில் நடப்பது வழக்கமான ஒன்றே. ஐபில் தொடரில் இதுபோன்று ஆச்சரியத்திற்குரிய சம்பவங்கள் நடந்துவருகிறது. அதே நேரத்தில் நாம் கிரிக்கெட் போட்டிகளை சரியான முறையில் ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது.
அஸ்வின் மன்கட் முறையை பயன்படுத்தியது தேவையில்லாத ஒன்றாகதான் கருதுகிறேன். அவர் பட்லரை அவுட்டாக்கிய முறை விதிகளின்கீழ் இருந்தாலும், ஒரு சரியான ஆட்டத்திற்குரிய முறையல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.