இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு தொடக்க வீரர் தவான் சிறப்பாக ஆடுவது முக்கியமாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி அணியின் ஆலோசகர் கங்குலி பேசுகையில், 'கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் தவானின் ஆட்டம் முக்கியமாக இருக்கும். அவரிடன் பயிற்சியின் போது பேசுகையில், வழக்கம்போல் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறினேன். கொல்கத்தா அணியில் ரஸல் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் கிரிக்கெட் போட்டியில் எப்போது என்ன நடக்கும் எனத் தெரியாது. டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் ரஸல் விக்கெட்டை விரைவாக வீழ்த்துவர்' என தெரிவித்தார்.
இதுவரை டெல்லி அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் தொடக்க வீரர் தவான் மும்பைக்கு எதிராக 36 பந்துகளில் 43 ரன்களும், சென்னை அணிக்கு எதிராக 47 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.