ETV Bharat / sports

சிங்கத்தின் குகைக்குள் வந்து வசமாக சிக்கிக்கொண்ட கொல்கத்தா! - lair

சென்னை: கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சென்னை அணி
author img

By

Published : Apr 10, 2019, 7:42 AM IST

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை அணி, பலம்வாய்ந்த கொல்கத்தா அணியுடன் மோதியது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஸல் 50 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹார் மூன்று, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 109 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சுரேஷ் ரெய்னாவும் 14 ரன்களில் நடையைகட்டினார். பின்னர், ராயுடுவுடன் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டுபிளசிஸ் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திவந்தார்.

இவ்விரு வீரர்களும் 47 ரன்களை சேர்த்த நிலையில், ராயுடு 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் கேதர் ஜாதவ் - டுபிளசிஸ் இணை நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடியது.

இறுதியில் சென்னை அணி 17.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்களை எட்டியது. இந்தப் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே வழங்கி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய சென்னை வீரர் தீபக் சஹார் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.