சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்ட்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஐந்தாம் நாள் தொடக்கம்
இறுதிப்போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தை வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் தொடங்கினர். இன்றைய ஆட்டத்தின் முதல் விக்கெட்டாக ராஸ் டெய்லர் 11 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் நிக்கோலஸ் 7 ரன்களிலும், வாட்லிங் 1 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 13 ரன்களிலும், ஜேமீசன் 21 ரன்களிலும், நிலைத்து நின்று ஆடிவந்த வில்லியம்சன் 49 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
-
New Zealand all out for 249 & that's Tea on Day 5 of the #WTC21 Final!
— BCCI (@BCCI) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
4⃣ wickets for @MdShami11
3⃣ wickets for @ImIshant
Kane Williamson scores 4⃣9⃣ as New Zealand secure a 32-run lead. #TeamIndia shall come out to bat shortly.
Scorecard 👉 https://t.co/CmrtWscFua pic.twitter.com/QU39HjFqIb
">New Zealand all out for 249 & that's Tea on Day 5 of the #WTC21 Final!
— BCCI (@BCCI) June 22, 2021
4⃣ wickets for @MdShami11
3⃣ wickets for @ImIshant
Kane Williamson scores 4⃣9⃣ as New Zealand secure a 32-run lead. #TeamIndia shall come out to bat shortly.
Scorecard 👉 https://t.co/CmrtWscFua pic.twitter.com/QU39HjFqIbNew Zealand all out for 249 & that's Tea on Day 5 of the #WTC21 Final!
— BCCI (@BCCI) June 22, 2021
4⃣ wickets for @MdShami11
3⃣ wickets for @ImIshant
Kane Williamson scores 4⃣9⃣ as New Zealand secure a 32-run lead. #TeamIndia shall come out to bat shortly.
Scorecard 👉 https://t.co/CmrtWscFua pic.twitter.com/QU39HjFqIb
அஸ்வினின் அரைவல்
இதற்கடுத்து, இறுதிவரிசை வீரர்கள் என்பதால் எளிதாக விக்கெட்டை வீழ்த்திவிடலாம் என்றெண்ணிய கோலி அண்ட் கோவிற்கு சவுத்தி தலைவலியை ஏற்படுத்தினார்.
ஷமி, இஷாந்தை மாற்றி மாற்றி பயன்படுத்திவந்த கோலி, அஸ்வினை களமிறக்கினார். அஸ்வின் வீசிய அந்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே நீல் வாக்னரை 'டக்-அவுட்' ஆக்க, மறுமுனையில், சவுத்தி சிறுக சிறுக ரன்னைச் சேர்த்துக் கொண்டிருந்தார்.
-
Ravichandran Ashwin makes his presence felt on day five 👊
— ICC (@ICC) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dismisses Neil Wagner for a duck!
🇳🇿 are 234/9.#WTC21 Final | #INDvNZ | https://t.co/H8DEtsdJwT pic.twitter.com/m1WdMmFs7g
">Ravichandran Ashwin makes his presence felt on day five 👊
— ICC (@ICC) June 22, 2021
Dismisses Neil Wagner for a duck!
🇳🇿 are 234/9.#WTC21 Final | #INDvNZ | https://t.co/H8DEtsdJwT pic.twitter.com/m1WdMmFs7gRavichandran Ashwin makes his presence felt on day five 👊
— ICC (@ICC) June 22, 2021
Dismisses Neil Wagner for a duck!
🇳🇿 are 234/9.#WTC21 Final | #INDvNZ | https://t.co/H8DEtsdJwT pic.twitter.com/m1WdMmFs7g
32 ரன்கள் முன்னிலை
ஒருகட்டத்தில், ஜடேஜா பந்துவீச வர, அவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரளவைத்தார் சவுத்தி. இருப்பினும், அடுத்த பந்திலேயே தனது சுழல் ஜாலத்தைக் காட்டி சவுத்தியின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடஜோ. சவுத்தி 30(46) ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களை குவித்து 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
தற்போது,இந்திய அணி தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: WTC FINAL: விக்கெட் வேட்டையில் ஷமி, வில்லியம்சன் அவுட்!