ETV Bharat / sports

அக்.17 - நவ.14- டி-20 உலக கோப்பை தீபாவளி- முழு அட்டவணை!

7ஆவது சர்வதேச டி20 (2021) ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முழு அட்டவணை ஆக.17 (செவ்வாய்க்கிழமை) வெளியானது. இந்தத் தொடரில் 16 அணிகள் மோதுகின்றன.

ICC
ICC
author img

By

Published : Aug 18, 2021, 6:03 PM IST

Updated : Aug 18, 2021, 6:50 PM IST

துபாய் : 2021 டி-20 ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி நிறைவடைகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 16 அணிகளும் இது பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரிவுகள் மார்ச் 20, 2021 நிலவரப்படி அணிகளின் தர வரிசைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் நேரடியாக செல்லும் சூப்பர் 12 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இன்ஸ்டீஸ், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

மீதமுள்ள 4 இடங்களுக்கு தகுதிச் சுற்று நடைபெறும். இதில், ஏ பிரிவு தகுதி சுற்று அணிகளில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் உள்ளன.

ICC
ஐசிசி

'பி' பிரிவில் வங்கதேசம், ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் உள்ளன. இதில் ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணியும், பி பிரிவில் இரண்டாம் இடம் பெறும் அணியும் சூப்பர் குரூப்1இல் இடம்பெறும்.

சூப்பர் 12 குரூப்-2 பிரிவில் பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2ஆம் இடம் பிடிக்கும் அணியும் இடம்பெறும். உலக கோப்பை போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகின்றன.

இதில் சூப்பர் 12 பிரிவி்ல குரூப் 2 பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளன. இந்திய அணியோடு சேர்த்து பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2ஆம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.

2021 ICC T20 World Cup format
கேப்டன் விராத் கோலி

துபாயில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. முதல் ஆட்டமே பாகிஸ்தானுடன் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்திய அணிக்கு 2ஆவது ஆட்டம் அக்டோபர் 31ஆம் தேதி துபாயில் நடக்கும் போட்டியில் நியூஸிலாந்துடன் மோதுகிறது. நவம்பர் 3ஆம் தேதி அபுதாபியில் நடக்கும் 3ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

நவம்பர் 5ஆம் தேதி பி பிரிவில் முதலிடம் பெற்ற அணியுடனும், நவம்பர் 8ஆம் தேதி ஏ பிரிவில் 2ஆம் இடம் பெற்ற அணியுடனும் மோதுகிறது. ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் பிடியில் உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் வீரர்கள் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவார்களா? என்ற ஐயம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : ஆப்கான் வீரர்கள் ரஷித் கான், முகமது நபி ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா?

Last Updated : Aug 18, 2021, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.