ஹாங்சோ : ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசம், இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.
தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் 5 ரன், சைப் ஹசன் 1 ரன், ஷாகீர் ஹசன் டக் அவுட், மற்றொரு தொடக்க வீரர் பர்வேஷ் ஹுசைன் 23 ரன், ஷாகாதத் ஹூசைன் 5 ரன், அபிப் ஹூசை 7 ரன் என அடுத்தடுத்து இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால் வங்கதேசம் அணியின் மிடில் வரிசை தள்ளாடியது. விக்கெட் கீப்பர் ஜாகர் அலி மட்டும் கடைசி வரை போராடிக் கொண்டு இருந்தார். மறுபுறம் வீரர்கள் வருவதும் போவதுமாக விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
விக்கெட் கீப்பர் ஜாகர் அலி 24 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார். தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. ரன் கணக்கை துவங்கும் முன்னரே இந்திய வீரர்கள் விக்கெட் கணக்கை தொடங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் யாஸ்சஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய திலக் வர்மா, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தத் தொடங்கினார். இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி ரன் வேகத்தை உயர்த்தினர்.
அடித்து ஆடிய இருவரும் 9 புள்ளி 1 ஓவர்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். 9 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 97 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு சென்றது. இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
A formidable 9️⃣-wicket win over Bangladesh and #TeamIndia are through to the #AsianGames Final! 👏🏻👏🏻
— BCCI (@BCCI) October 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard ▶️ https://t.co/75NYqhTEac#IndiaAtAG22 pic.twitter.com/SsRVenSNmu
">A formidable 9️⃣-wicket win over Bangladesh and #TeamIndia are through to the #AsianGames Final! 👏🏻👏🏻
— BCCI (@BCCI) October 6, 2023
Scorecard ▶️ https://t.co/75NYqhTEac#IndiaAtAG22 pic.twitter.com/SsRVenSNmuA formidable 9️⃣-wicket win over Bangladesh and #TeamIndia are through to the #AsianGames Final! 👏🏻👏🏻
— BCCI (@BCCI) October 6, 2023
Scorecard ▶️ https://t.co/75NYqhTEac#IndiaAtAG22 pic.twitter.com/SsRVenSNmu
இதையும் படிங்க : அதிவேக சதம்.. 2 சாதனைகளை துவம்சம் செய்த இந்திய வாம்சாவளி நியூசிலாந்து அணி வீரர்.. யார் இந்த ரச்சின் ரவீந்திரா?