ETV Bharat / sports

Asian Games Cricket : இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி! நேபாளத்தை ஊதித் தள்ளியது!

நேபாளம் அணிக்கு எதிரான ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

Cricket
Cricket
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 10:01 AM IST

Updated : Oct 3, 2023, 10:34 AM IST

ஹாங்சோ : ஆசிய விளையாட்டில் நேபாளம் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 19வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 20 ஒவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலாவது காலி இறுதி ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்சை கேப்டன் ருதுராஜ் மற்றும் யாஸ்சஸ்வி ஜெய்ஸ்வால் தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் நேபாள வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அடித்து விளையாடி ஜெய்ஸ்வால் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி வாண வேடிக்கை காண்பித்தார்.

மறுபுறம் கேப்டன் ருதுராஜ் 25 ரன், திலக் வர்மா 2 ரன், ஜித்தேஷ் சர்மா 5 ரன் என அடுத்தடுத்து நடையை கட்டினர். இருப்பினும், நேபாளம் பந்துவீச்சி விளாசித் தள்ளிய ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் விளாசியது. ஷிவம் துபே 25 ரன்களும், ரிங்கு சிங் 37 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் நின்றனர்.

தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் வீரர்களும் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இருப்பினும் இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு நேபாள வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக இந்திய வீரர்கள் ரவி பிஷ்னாய், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை விளாசி நேபாளம் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்தனர்.

  • 🇮🇳 MEN'S CRICKET UPDATE🏏 #AsianGames2022#TeamIndia has secured a spot in the semi-finals with a 23-run victory against Nepal! 🎉🙌

    🌟 @ybj_19's spectacular century stole the show with 100 runs in just 49 balls, including 8 fours and 7 sixes! 💯🔥

    🎯 On the bowling front,… pic.twitter.com/gYNRrwo9vG

    — SAI Media (@Media_SAI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நேபாளம் அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க : Asian Games Cricket : இந்திய அணி அபார வெற்றி! நேபாளத்தை ஊதித் தள்ளியது!

Last Updated : Oct 3, 2023, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.