ETV Bharat / sports

IND vs SL 3rd ODI: டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த இந்தியா!

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடிவருகிறது.

IND vs SL 3rd ODI
IND vs SL 3rd ODI
author img

By

Published : Jul 23, 2021, 4:25 PM IST

கொழும்பு: இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடிவருகிறது.

இந்தப் போட்டியில் யுஸ்வேந்திர சாஹல், இஷான் கிஷன், குல்தீப் யாதவ், குருணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர் ஆகியோருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன், நிதீஷ் ராணா, சேதன் சாகரியா, கிருஷ்ணப்பா கவுதம், நவ்தீப் சைனி, ராகுல் சாஹர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து, தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்திய அணி சார்பில் முதலில் களமிறங்கிய பிரித்வி ஷா 49 ரன்களிலும், ஷிகர் தவான் 13 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். தற்போது 16ஆவது ஓவர் முடிவின்படி இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்துள்ளது.

இலங்கை அணியின் துஷ்மந்தா சமீரா தவானையும், தசுன் சனக்கா பிரித்வி ஷாவையும் தங்களின் திறமையான பவுலிங்கால் ஆட்டமிழக்கவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.