ETV Bharat / sports

Ind Vs SA: 116 ரன்களுக்குள் சுருண்டது தென் ஆப்பிரிக்கா! அர்ஷ்தீப், அவெஷ் கான் அசத்தல்! - இந்தியா தென் ஆப்பிரிக்கா

India Vs South Africa First ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 116 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டியது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 4:37 PM IST

ஜோகன்னஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரி நிறைவு பெற்ற நிலையில், அதில் 1க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச. 17) ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் இன்னிங்சை ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஷோர்சி ஆகியோர் தொடங்கினர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் தொடக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராஸ்ஸி வான் தர் துஸ்சென் அதே அர்ஷ்தீப் சிங் பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

3 ரன்களுக்குள் தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனிடையே மற்றொரு தொடக்க வீரர் டோனி ஷோர்சியுடன் கைகோர்த்த கேப்டன் எய்டன் மார்க்ராம் அணியின் நிலையை சீராக்க முயன்றார். இருப்பினும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

டோனி ஷோர்சி 28 ரன்களிலும், அவரத் தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரி கிளெசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணியால் அடுத்து எழுந்து நிற்கவே முடியவில்லை.

கேப்டன் எய்டன் மார்க்ராம் 12 ரன், டேவிட் மில்லர் 2 ரன், வியான் முல்டன் டக் அவுட், கேசவ் மகராஜ் 7 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். இறுதி கட்டத்தில் அண்டிலே மற்றும் நம்பிக்கை அளிக்கும் விதமாக 33 ரன்கள் குவித்து நடையை கட்டினார்.

27 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும், அவெஷ் கான் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். அதிரடியாக பந்துவீசி அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணியை கட்டுப்படுத்த இந்திய அணிக்கு வசதியாக இருந்தது. தொடர்ந்து 117 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க : விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் - அரியானா முதல் முறை சாம்பியன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.