சென்னை: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 5வது லீக் போட்டியாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ் களம் இறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீச்சிய இந்திய அணி வீரர்கள் முதல் விக்கெட்டாக மார்ஸ் விக்கெட்டை கைப்பற்றினர்.
-
Innings break!
— BCCI (@BCCI) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Australia are all out for 199 courtesy of a solid bowling performance from #TeamIndia 👏👏
Ravindra Jadeja the pick of the bowlers with figures of 3/28 👌👌
Scorecard ▶️ https://t.co/ToKaGif9ri#CWC23 | #INDvAUS | #MeninBlue pic.twitter.com/TSf9WN4Bkz
">Innings break!
— BCCI (@BCCI) October 8, 2023
Australia are all out for 199 courtesy of a solid bowling performance from #TeamIndia 👏👏
Ravindra Jadeja the pick of the bowlers with figures of 3/28 👌👌
Scorecard ▶️ https://t.co/ToKaGif9ri#CWC23 | #INDvAUS | #MeninBlue pic.twitter.com/TSf9WN4BkzInnings break!
— BCCI (@BCCI) October 8, 2023
Australia are all out for 199 courtesy of a solid bowling performance from #TeamIndia 👏👏
Ravindra Jadeja the pick of the bowlers with figures of 3/28 👌👌
Scorecard ▶️ https://t.co/ToKaGif9ri#CWC23 | #INDvAUS | #MeninBlue pic.twitter.com/TSf9WN4Bkz
மார்ஸ் எந்த ரன்களும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதன் பின் வார்னர் மற்றும் ஸ்மித் அணிக்கு நிதானமாக ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் வார்னர் 41 ரன்களுடனும், ஸ்மித் 46 ரன்களுடனும் ஆட்டமிழக்க, அதனை தொடர்ந்து வந்த லபுசேன் 27, மேக்ஸ்வெல் 15, அலெக்ஸ் கேரி 0, கிரீன் 8, கம்மின்ஸ் 15 என அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
-
An absolute 🍑 from Ravindra Jadeja to castle Steve Smith 😯
— ICC (@ICC) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch it here 👇#CWC23 | #INDvAUShttps://t.co/kGDzYGKDIN
">An absolute 🍑 from Ravindra Jadeja to castle Steve Smith 😯
— ICC (@ICC) October 8, 2023
Watch it here 👇#CWC23 | #INDvAUShttps://t.co/kGDzYGKDINAn absolute 🍑 from Ravindra Jadeja to castle Steve Smith 😯
— ICC (@ICC) October 8, 2023
Watch it here 👇#CWC23 | #INDvAUShttps://t.co/kGDzYGKDIN
அதனைத் தொடர்ந்து இந்திய அணி 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, இஷான் கிஷன் டக் அவுட் ஆகினர். அதன் பின் வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
-
India overcome an early wobble to take their opening #CWC23 by a comfortable margin 💪#INDvAUS 📝: https://t.co/Qh7kBjviYJ pic.twitter.com/pbTH3UMLkf
— ICC (@ICC) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India overcome an early wobble to take their opening #CWC23 by a comfortable margin 💪#INDvAUS 📝: https://t.co/Qh7kBjviYJ pic.twitter.com/pbTH3UMLkf
— ICC (@ICC) October 8, 2023India overcome an early wobble to take their opening #CWC23 by a comfortable margin 💪#INDvAUS 📝: https://t.co/Qh7kBjviYJ pic.twitter.com/pbTH3UMLkf
— ICC (@ICC) October 8, 2023
பின்னர் களம் புகுந்த விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இந்த ஜோடி 165 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டிய நிலையில், கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 41.2 ஓவர்களில் 201 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
ராகுல் 97 ரன்களுடனும், ஹர்திக் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேயா அணி சார்பில் அதிகபட்சமாக ஹெசில்வுட் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையும் படிங்க: இவருக்கு இதான் வேலை! மைதானத்திற்குள் ஜார்வோ அட்ராசிட்டி! அதிர்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள்!