ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 2-ஆவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட வீரர்கள் இந்திய இந்த தொடரில் ஒயிட் வாஷ் ஆகும் என கிண்டில் செய்தனர். ஆனால் விமர்சனம் செய்தவர்கள் அனைவருக்கும் தக்க பதிலடி தரும் வகையில் தொடரை வென்று காட்டி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள், இது ஒரு அருமையான வெற்றி. ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட பங்களிப்புடன் விளையாடியதால் இறுதி போட்டியில் வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது. இளம் வீரர்களின் சிறந்த ஆட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!