இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஸிற்கு காயமடைந்ததால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஹென்ட்ரிக்ஸ் களமிறக்கப்பட்டுள்ளார். இந்திய அணி முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் மீண்டும் களமிறங்கியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்காக வார்னர் - ஃபின்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். அதில் ஃபின்ச் நிதானமாக ஆடி வரும் நிலையில், மறுமுனையில் வார்னர் அதிரடியாக ரன் குவித்து வருகிறார். தற்போதுவரை ஆஸி. அணி 10 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த பெங்களூரு - ஹைதராபாத் ஆட்டம்!