ராஜ்கோட்: தென்னாப்பிரிக்கா-இந்தியா இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று (ஜூன் 17) குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில், களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடியால், தென்னாப்பிரிக்க அணிக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
கேப்டனுக்கு காயம்: இதனைத் தொடர்ந்து, ஆடிய தென்னாப்பிரிக்க பேட்டர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர். இதனால், அந்த அணி 16.5 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்கா பேட்டிங்கில் அதிகபட்சமாக வான் டெர் டஸ்ஸன் 20 (20) ரன்களை எடுத்தார். புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சின்போது டெம்பா பவுமா தோள்பட்டையில் பந்து தாக்கியது. இதனால், ரிட்டயர் - ஹர்ட் மூலம் அவர் வெளியேறினார்.
-
A fine catch by @Ruutu1331 as @Avesh_6 picks his third wicket. 👌 👌
— BCCI (@BCCI) June 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Marco Jansen departs as South Africa lose their sixth wicket.
Follow the match ▶️ https://t.co/9Mx4DQmACq #TeamIndia | #INDvSA | @Paytm pic.twitter.com/CiQEOLqLYl
">A fine catch by @Ruutu1331 as @Avesh_6 picks his third wicket. 👌 👌
— BCCI (@BCCI) June 17, 2022
Marco Jansen departs as South Africa lose their sixth wicket.
Follow the match ▶️ https://t.co/9Mx4DQmACq #TeamIndia | #INDvSA | @Paytm pic.twitter.com/CiQEOLqLYlA fine catch by @Ruutu1331 as @Avesh_6 picks his third wicket. 👌 👌
— BCCI (@BCCI) June 17, 2022
Marco Jansen departs as South Africa lose their sixth wicket.
Follow the match ▶️ https://t.co/9Mx4DQmACq #TeamIndia | #INDvSA | @Paytm pic.twitter.com/CiQEOLqLYl
ஆட்டநாயகன் தினேஷ்: இந்திய பந்துவீச்சு சார்பில் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், சஹால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முன்னதாக, பேட்டிங்கின் போது இந்திய அணியின் டாப் - ஆர்டர் பேட்டர்கள் தடுமாறி வந்த நிலையில், ஃபினிஷராக களமிறங்கி 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 55 ரன்களை குவித்து தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். மேலும், ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
-
Clinical win for #TeamIndia in Rajkot! 👏 👏
— BCCI (@BCCI) June 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The @RishabhPant17-led unit beat South Africa by 82 runs to level the series 2-2. 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/9Mx4DQmACq #INDvSA | @Paytm pic.twitter.com/fyNIlEOJWl
">Clinical win for #TeamIndia in Rajkot! 👏 👏
— BCCI (@BCCI) June 17, 2022
The @RishabhPant17-led unit beat South Africa by 82 runs to level the series 2-2. 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/9Mx4DQmACq #INDvSA | @Paytm pic.twitter.com/fyNIlEOJWlClinical win for #TeamIndia in Rajkot! 👏 👏
— BCCI (@BCCI) June 17, 2022
The @RishabhPant17-led unit beat South Africa by 82 runs to level the series 2-2. 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/9Mx4DQmACq #INDvSA | @Paytm pic.twitter.com/fyNIlEOJWl
5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றுள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் 5ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை (ஜூன் 19) நடைபெறுகிறது.
இதையும் படிங்க: இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலக சாதனை