ETV Bharat / sports

ENG vs IND: தொடரை வென்றது இந்தியா - புவியின் புதிய சாதனை - இந்தியா இங்கிலாந்து மேட்ச் ஸ்கோர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ENG vs IND
ENG vs IND
author img

By

Published : Jul 10, 2022, 9:46 AM IST

பர்மிங்ஹாம்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று (ஜூலை 9) நடைபெற்றது. டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் கடந்த போட்டியை போன்று இதிலும் சொதப்பினர். இதனால், 17 ஓவர்களிலேயே அந்த அணி 121 ரன்களில் ஆல்- அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இந்திய அணி பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 3, சஹால், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்தில் அதிகபட்சமாக மொயின் அலி 35 (21), பந்துவீச்சாளரான டேவிட் வில்லி 33 (22) ரன்களை எடுத்தனர்.

முன்னதாக, பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா 46 (26) ரன்களை எடுத்து பெரிய இலக்கிற்கு வித்திட்டார். மேலும், ரோஹித் 31 (20), ரிஷப் பந்த் 26 (15) ரன்களை எடுத்து ஓப்பனிங்கில் மிரட்டியதால் இந்திய அணிக்கு பலமான அஸ்திவாரம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வெற்றியின் மூலம், ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்ந்து 14 போட்டிகளை வென்று அசத்தியுள்ளார். மேலும், அவர் தலைமையில் இந்தியா கைப்பற்றும் 6ஆவது டி20 தொடர் இதுவாகும்.

இந்த போட்டியில், புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களில் 15 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில், ஒரு மெய்டன் ஓவர் உள்பட மொத்தம் 11 டாட் பந்துகளையும் வீசி அசத்தினார். இதன்மூலம், டி20 அரங்கில் 500ஆவது டாட் பந்தை புவனேஷ்வர் குமார் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக டாட் பந்துகளை வீசியவர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார் முதலிடத்திலும் (500), மேற்கு இந்திய தீவுகள் அணியின் சாமுவேல் பத்ரீ (383), நியூசிலாந்தின் டிம் சௌதி (368), ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார் (354) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதையும் படிங்க: காலம் கடந்தும் ஆறாத வடு!... சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் திக் திக் நிமிடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.